திறமைக்குறைவை மறைக்கப் பார்க்கிறது பிஎன்

1 an najibபிரதமர்துறை அலுவலகம் “மகாராஜாக்கள்”போல் தாராளமாக செலவிட்டது அதனால் ஏற்பட்டதுதான் நிதிப் பற்றாக்குறை என்கிறார் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம்.

“பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் வாக்குகளை-விலைக்கு வாங்கும் திட்டங்களில் பொதுப்பணம் பில்லியன் கணக்கில் செலவிடப்பட்டது”.

நிதிப் பற்றாக்குறையைச் சரிக்கட்ட பொருள், சேவை வரி கொண்டுவரப்பட்டால் தேர்தல் மோசடியை எதிர்ப்பதுபோல் மக்கள் அதையும் கடுமையாக எதிர்ப்பர் என்றாரவர்.

பற்றாக்குறையைக் குறைக்க புதிய வரிகளைக் கொண்டுவர வேண்டாம். அரசாங்கச் செலவுகளைக் குறைத்தாலே போதும் என்று அன்வார் கூறினார்.