கடந்த பொதுத் தேர்தல் தற்போது பூமிபுத்ரா ஆதிக்கம் பெற்ற கூட்டரசு அரசாங்கத்திற்குப் பதில் முஸ்லிம் அல்லாத சீனர் அடிப்படையிலான நிர்வாகத்தை அமைப்பதற்கு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற சீனர்கள் வகுத்த திட்டம் என உத்துசான் மலேசியா சொல்கிறது.
வேட்பாளர்களை தேர்வு செய்வது, நிறுத்துவது, தாக்குவது, தற்காப்பது ஆகிய எல்லா ஏற்பாடுகளையும் சீனர்கள் 13வது பொதுத் தேர்தலில் நன்கு திட்டமிட்டு செயல்படுத்தியதாக அது குறிப்பிட்டது.
மலேசிய சீனர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் அந்தத் திட்டத்தை எடுத்துக் காட்டுகின்றன,” என அந்த ஏட்டின் துணைத் தலைமை ஆசிரியர் ஜைனி ஹசான் தமது வாராந்திர Cuit கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
சீனர்கள் இந்த நாட்டில் மூன்று முக்கிய வியூகங்களைக் கொண்டுள்ளதாகவும் ஜைனி கூறிக் கொண்டார். குடியுரிமையைப் பெறுவதும் பொருளாதாரத்தை கட்டுப்படுத்துவது ஆகியவை முதல் இரண்டு வியூகங்களாகும்.