தடுப்புக்காவல் மரணத்தைத் தடுக்க தனி விசாரணை மையங்கள்

lock upஅரசாங்கம் தடுப்புக்காவல் மரணங்களைத் தடுக்கும் நோக்கில் கைதிகளை  விசாரிப்பதற்குத் தனி லாக்-அப் மையங்களை அமைக்கும்.

அம்மையங்களில்தான் கைதிகள் விசாரிக்கப்படுவர். அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு விசாரணைகள் பதிவு செய்யப்படும் என்று உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜஹிட் ஹமிடி கூறினார்.

“போலீஸ் நிலையங்களில் உள்ள லாக்-அப்பில் விசாரணை நடத்தப்படாது”.

எல்லா மாநிலத் தலைநகரங்களிலும் லாக்-அப் மையம் இருக்கும். பெரிய மாநிலங்களில் தேவைக்கேற்ப குறிப்பிட்ட மாவட்டங்களிலும் அவை அமைக்கப்படும்.

அதேபோல் தடுப்புக்காவல் மரணங்களை விசாரிப்பதற்கு தனி நீதிமன்றங்களும் அமைக்கப்படும்.