சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த வெளியில் எரிப்பதற்கு தடை

fireஅடுத்த அறிவிப்பு வரை சிலாங்கூர், மலாக்கா, ஜோகூர் ஆகியவற்றில் திறந்த  வெளியில் எரிப்பதற்கு சுற்றுச்சூழல் துறை தடை விதித்துள்ளது.

அந்தத் தகவலை அதன் தலைமை இயக்குநர் ஹலிமா ஹசான் இன்று
கோலாலம்பூரில் வெளியிட்டார்.

என்றாலும் சமயச் சடங்குகள், கருமக் கிரியைகள் போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

“அந்தத் தடையை மீறுகின்றவர்களுக்கு 500,000 ரிங்கிட் வரையில் அபராதம் அல்லது ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.  ஒவ்வொரு குற்றத்துக்கும் கூடின பட்ச compound அபராதமாக 2,000 ரிங்கிட்  வரையிலும் விதிக்கப்படலாம்.”

அந்த மூன்று மாநிலங்களும் அண்டை நாடான இந்தோனிசியாவில் மூண்டுள்ள காட்டுத் தீ ஏற்படுத்திய புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பெர்னாமா