கடந்த பொதுத் தேர்தலில் பேரிழப்பை எதிர்நோக்கிய மசீச,கட்சியை திருத்தி அமைப்பதற்கான வ ழிகள் மீது அடித்தட்டு உறுப்பினர்கள், பொது மக்கள், அரசு சாரா அமைப்புக்கள் ஆகிய தரப்புக்களிடமிருந்து கருத்துக்களைத் திரட்டும்.
பின்னர் அந்தக் கருத்துக்கள் கட்சியின் உருமாற்ற பெருந்திட்டமாக
வடிவமைக்கப்படும் என உருமாற்ற பணிக்குழுத் தலைவர் லியாவ் தியோங் லாய் கூறினார்.
அடுத்து அந்தத் திட்டத்தை கட்சியின் மத்தியக் குழு அங்கீகரித்ததும் டிசம்பர் 21ல் நிகழும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேராளர்களுடைய விவாதத்திற்குச் சமர்பிக்கப்படும் என அவர் சொன்னார்.
கடந்த தேர்தலில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 90 சட்டமன்றத்
தொகுதிகளிலும் மசீச போட்டியிட்டது. ஆனால் ஏழு நாடாளுமன்ற இடங்களிலும் 11 சட்டமன்ற இடங்களிலும் மட்டுமே அது வென்றது.
தோல்விக்கான காரணங்களை ஆராயவும் அந்தக் கட்சியை உருமாற்றம்
செய்வதற்கான வழிகளைப் பரிந்துரைக்கவும் உருமாற்றப் பணிக்குழுவை அந்தக் கட்சி அமைத்துள்ளது.
நஜிப்பும் இப்படிதான் சொன்னார் கிழிந்து விட்டார் !