மலேசிய ஒலிம்பிக் மன்றம் நடத்தும் ஒலிம்பிக் நாள் ஓட்டம் ஜூன் 23-இல் டாட்டாரான் நடைபெறுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது கடைசி நேரத்தில் அது பாடாங் மெர்போக்குக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது வியப்பளிக்கிறது.
இதைக் காரணம்காட்டி ‘505 கறுப்புப் பேரணி’யை அங்கு நடத்துவதற்கு இடம் கொடுக்க டிபிகேஎல் மறுப்புத் தெரிவிக்கலாம். அதற்காகத்தான் இந்த இடமாற்ற நாடகம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆனால், பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி பேரணி பாடாங் மெர்போக்கில்தான் என்பதில் உறுதியாக இருக்கிறார்.
“ஓட்டப் பந்தயம் ஜூன் 23-இல். எங்கள் பேரணி மாலை 6 மணிக்கு முடியும்(ஜூன் 22). அவர்கள் போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்ய முழுதாய் 12 மணி நேர அவகாசம் இருக்கிறது”, என்றார்.
ஜூன் 22-இல் அங்கு எந்த நிகழ்வும் இல்லை. அதுதான் முக்கியம் என்றவர் வலியுறுத்தினார்.