சனிக்கிழமைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேரணிக்கு முன்னதாக ‘505 திடீர் கும்பலை’ சேர்ந்த 15 ஆர்ப்பாட்டக்காரர்கள் கோலாலம்பூரில் ஜாலான் துன் பேராக்கில் வழக்கத்துக்கு மாறான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களது நடவடிக்கை அந்தப் பகுதியில் சென்ற காரோட்டிகளின் கவனத்தை ஈர்த்தது.
மஸ்ஜித் ஜாமெய்க் எல்ஆர்டி நிலையத்துக்கு அருகில் நேற்று மாலை மணி 6.00 வாக்கில் கூடிய அவர்கள் போக்குவரத்து நெரிசலான நேரத்தில் சாலைப் பிரிப்பில் படுத்துக் கொண்டனர்.
அவர்கள் இசி தலைவர்கள் பதவி துறக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் ‘505 கறுப்பு தின’ பக்காத்தான் ராக்யாட் பேரணியில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களைக் கேட்டுக் கொள்ளும் பதாதைகளையும் அட்டைகளையும் ஏந்தியிருந்தனர்.
சில ஆர்ப்பாட்டக்காரர்கள் பாஸ், பிகேஆர், டிஏபி ஆகிய பக்காத்தான் தோழமைக் கட்சிகளுடைய கொடிகளையும் வைத்திருந்தனர். அப்போது பெண் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘622’ என எழுதப்பட்டிருந்த பலூன்களை வைத்துக் கொண்டு சாலை ஒரத்தில் நின்று கொண்டிருந்தனர். அந்த எண் இந்த வார இறுதியில் நடத்தப்படும் பேரணிக்கான தேதியைக் குறித்தது.
செத்தாண்டா EC ! அவனை விடாதிங்க !
இதே போன்று, பேரணி நடத்தக் கூடாது என்று அம்னோ,ம.இ.கா. இளைஞர் பகுதியினர் சாலைப் பிரிவில் படுத்து ஆர்ப்பாட்டம் செய்வார்களே! அம்னோ செய்யாவிட்டாலும் ம.இ.கா. வினர் அவசியம் செய்வர். காரணம் அவர்களுக்கு நாட்டுப்பற்று அதிகமாச்சே!