‘அம்னோ உட்பூசல் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும். அதனால் தமது நிலையை பாதுகாத்துக் கொள்ள நஜிப் அன்வாருடன் அமைதியை நாடுகின்றாரா ?’
அன்வார் ஜகார்த்தாவில் நஜிப்பின் சதுரங்க ஆட்டத்தை நிராகரித்தார்
அகமட்: தேர்தல் தகராற்றைத் தீர்ப்பதற்கு எதிரணித் தலைவர் அன்வார்
இப்ராஹிமுடன் பேச்சு நடத்த பிரதமர் நஜிப் ரசாக் முன் வந்ததை நான்
வரவேற்கிறேன்.
அந்த விஷயத்தில் பக்காத்தான் ராக்யாட் தனது நிலையை தெளிவுபடுத்தி விட்டது. எதிர்காலத் தேர்தல்களில் தேர்தல் நடைமுறைகளைத் தூய்மைப்படுத்த அது தொடர்ந்து முயல வேண்டும்.
கிராமப்புற மலாய்க்காரர்களையும் கிழக்கு மலேசியர்களையும் கவர பக்காத்தான் அதிக நேரத்தையும் வளங்களையும் செலவு செய்ய வேண்டும். மலேசியாவில் ஜனநாயகம் முன்னேற்றம் காண்கிறது.
கனநீர்: அம்னோ உட்பூசல் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும். அதனால் தமது நிலையை பாதுகாத்துக் கொள்ள நஜிப் அன்வாருடன் அமைதியை நாடுகின்றாரா ?’ அன்வார் சரியானதைச் செய்கிறார். அன்வாருக்கு பாராட்டுக்கள்.
யாகூ: நஜிப் எவ்வளவு முட்டாளாக இருக்க வேண்டும் ? அவர் அன்வாருக்கு மில்லியன் கணக்கில் கொடுத்தால் அன்வார் தமது ஆயுட்காலத்தில் வாக்காளர்களில் 51 விழுக்காட்டினரை மீண்டும் சந்திக்கவே முடியாது.
ராஜா சூலான்: மலேசியாவின் உள் அரசியல் பிரச்னைக்கு நடுவர் பணியாற்ற நஜிப்பும் அன்வாரும் இந்தோனிசியர்களை நாடுகின்றனர் என்ற தகவல் பொய்யாக இருக்க வேண்டும் என நான் பிரார்த்திக்கிறேன்.
அது உண்மை என்றால் இருவரும் நமது தேசிய பாதுகாப்பு, சுதந்திரம்,
இறையாண்மை ஆகியவற்றை சமரசம் செய்து கொள்கின்றனர் என அர்த்தம்.
நம் நாட்டில் நிகழும் விஷயங்களும் அரசியல்வாதிகளுடைய போக்கும் எனக்கு மிகவும் வெட்கத்தை அளித்துள்ளது. சில காலத்துக்கு முன்பு நமது எதிரியாக இருந்த, மூன்றாம் உலக நாடான இந்தோனிசியாவுக்குச் சென்று நமது உள்நாட்டு அரசியல் பிரச்னைகளைத் தீர்க்க முயலும் அளவுக்கு நாம் விரக்தி அடைந்து விட்டோமா ?
அவர்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் எந்த ஒப்பந்தத்திலும் தங்கள் நலனையும் இந்தோனிசியர்கள் இணைத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.
எஸ்எஸ் டாலிவால்: அன்வார் பிரதமரைத் தவிர்த்தது நல்ல முடிவு. நம்மை சாந்தப்படுத்துவதற்கு எலும்புத் துண்டுகள் வீசப்படுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை. குடிமக்கள் என்ற முறையில் எங்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். சட்ட விரோத அம்னோ அரசாங்கத்திலிருந்து விலக வேண்டும். அல்லது குறைந்தது நியாயமான மறு தேர்தலை எங்களுக்கு வழங்குங்கள்.