முன்னாள் ஸ்ரீ காடிங் எம்பி ஜோகூர் சட்டமன்ற சபாநாயகர்

mohadநாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய பல அறிக்கைகளை வெளியிட்ட  முன்னாள் ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ், ஜோகூர் சட்டமன்ற சபாநாயகராக  பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டுள்ளார்.

அவரது மனைவி அஜிஸா ஸாக்காரியா பாரிட் ராஜா சட்டன்றத் தொகுதிக்கான  உறுப்பினராக முதல் தவணைக் காலத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஆகவே முகமட் தமது மனைவியை பாரபட்சமின்றி நடத்துவாரா என்ற கேள்வி  எழுந்துள்ளது.

சபாநாயகர் பதவிக்கு ஜோகூர் மந்திரி புசார் காலித் நோர்டின் முன்மொழிந்த  ஒரே நபர் முகமட் ஆவார்.

கடந்த ஆண்டு ஜுன் மாதம் நாடாளுமன்ற விவாதத்தின் போது பெர்சே இணைத்  தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் தேசத் துரோகத்திற்காக தூக்கிலிடப்பட வேண்டும்  எனக் கூறியதின் மூலம் அவர் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.

எதிர்க்கட்சிகளும் சிவில் சமூகமும் அவரைக் கடுமையாக கண்டித்ததைத் தொடர்ந்து  முகமட், தமது கருத்துக்களை மீட்டுக் கொண்டார். அவர் மீது எந்த  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.