குறைந்த கட்டண விமானச்சேவை முனையமான கேஎல்ஐஏ2-ஐக் கட்டி முடிப்பதில் ஏற்பட்டுள்ள “மிகப் பெரிய தாமதத்துக்கு”ப் பின்னணியில் உள்ள உண்மைகளை மலேசிய விமானநிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) விளக்க வேண்டும் என்று டிஏபி கோரியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அம்முனையத்தைக் கட்டி முடிப்பதற்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டது. அது 2014 ஏப்ரல் 30-இல் கட்டி முடிக்கப்படுமாம்.
7 விழுக்காடு வேலை மட்டுமே எஞ்சியிருப்பதாகக் கூறப்பட்டுள்ள வேளையில் மேலும் 12 மாதம் தாமதமாகும் என்பது அதிர்ச்சி அளிப்பதாக டிஏபி விளம்பரப் பிரிவுத் தலைவர் டோனி புவா கூறினார்.
கட்டிமுடிப்பதில் தாமதம் ஏற்பட்டது பற்றி மட்டுமல்லாமல் அதற்கான பட்ஜெட் ரிம1.7 பில்லியனிலிருந்து ரிம 4 பில்லியனாக எகிறியது ஏன் என்றும் எம்ஏஎச்பி விளக்க வேண்டும் என்றாரவர்.