சிலாங்கூரில் தேர்தல் மோசடியை ஆராய ஆணையம் அமைக்கப்படும்

11 commissionசிலாங்கூர் அரசு, கடந்த பொதுத் தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் குறைகூறப்பட்டிருப்பதை ஆராய ஒரு ஆணையத்தை அமைக்கப்படும் என  அறிவித்துள்ளது.

“அப்படி ஒரு ஆணையம் அமைக்க  1950 விசாரணை ஆணையச் சட்டம் மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது”, என மந்திரி புசார்  அப்துல் காலிட் இப்ராகிம்  இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

“தேர்தல் மோசடி என்பது நாட்டின் ஜனநாயகத்தைப் பாதிக்கும் விவகாரம் என்பதால் மாநில அரசு அக்குற்றச்சாட்டுகளை அலசி ஆராய்வது  முக்கியமாகும்”, என்றவர் வலியுறுத்தினார்.