‘IPCMC இல்லாமல் குரோனர் நீதிமன்றம் பலவீனமாக இருக்கும்’

policeஒவ்வொரு மாநிலத்திலும் நிரந்தர குரோனர் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதை 29  அரசு சாரா அமைப்புக்கள் கூட்டணியான ‘அரசாங்க வன்முறையை நிறுத்துங்கள்  அமைப்பு’ வரவேற்றுள்ளது. ஆனால் விசாரணைகள் சுதந்திரமாகவும் இருக்காது என்பதால்   அது தடுப்புக் காவல் மரணங்களை திறமையாக விசாரிக்க முடியாது என அது கூறியது.

IPCMC என்ற போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை
ஆணையம் இல்லாத சூழ்நிலையில் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பான  விவகாரங்களில் போலீசாரே தங்கள் சொந்த சக ஊழியர்களைப் பற்றி தொடர்ந்து  விசாரித்து கொண்டிருப்பர் என அந்த கூட்டணி தெரிவித்தது.

IPCMC அமைக்கப்படாத நிலையில் குரோனர் நீதிமன்றத்தில் நாம் தங்கள்  சகாக்களுக்கு எதிராக போலீசார் தயாரித்த விசாரணை அறிக்கைகளையே  செவிமடுக்க வேண்டியிருக்கும் என்றும் அது குறிப்பிட்டது.

அது அந்த நீதிமன்றத்தின் நம்பகத்தன்மையை பெரிதும் குறைத்து விடும்.

 

TAGS: