சபாவில் சட்ட விரோதமாக குடியுரிமை கொடுக்கப்பட்ட குடியேற்றக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதில் புத்ராஜெயா பிடிவாதமாக இருந்தால் அவர்களை அது கூட்டரசு அரசாங்கம் அமைந்துள்ள தீவகற்ப மலேசியாவில் வைத்துக் கொள்ளலாம் என SAPP தலைவர் யோங் தெக் லீ கூறுகிறார்.
சபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் முன்பு அவர் சாட்சியமளித்தார். உண்மையான சபா மக்களை அடையாளம் கான்பதற்கு சபா அடையாளக் கார்டுகளை வழங்குவதின் மூலம் அதனைச் செய்ய முடியும் என்றார் அவர்.
கள்ளக் குடியேறிகள் குடிமக்கள் என கூட்டரசு அரசாங்கம் வலியுறுத்துமானால் அப்படியே இருக்கட்டும். அவர்கள் தீவகற்பத்தில் அங்குள்ள சட்டங்களுக்கு ஏற்ப இருக்கட்டும்.”
“நீங்கள் சபாவுக்குள் வர விரும்பினால் நீங்கள் சபாவைச் சேர்ந்தவர் என்பதை மெய்பிக்க வேண்டும் (சபா அடையாளக் கார்டைக் கொண்டு),” என யோங் சொன்னார்.