தடுப்புக் காவல் மரணங்களைத் தடுக்க கைதிகளை விசாரிப்பதற்குத் தனி லாக்-அப் மையங்களை அமைக்கும் யோசனையும் குரோனர் நீதிமன்றங்களை அமைக்கும் யோசனையும் போலீசாரைக் கண்காணிக்கும் அமைப்பு இல்லாத சூழ்நிலையில் ‘அறிவுக்கு ஒப்பாக’ இருக்காது என கெராக்கான் உதவித் தலைவர் ஏ கோகிலன் பிள்ளை கூறுகிறார்.
ஆகவே போலீஸ் புகார்கள், தவறான நடத்தை மீதான சுயேச்சை ஆணையத்தை ( IPCMC ) அமைப்பது தான் அடிப்படை நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
தடுப்புக் காவல் மரணங்கள் ”அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருவதாக’ குறிப்பிட்ட அவர், கண்காணிப்பு தேவை என்ற வேண்டுகோளைப் புறக்கணிப்பது நிலைமையை மோசமாக்கும் என கோகிலன் இன்று விடுத்த ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.