கோலாலம்பூர் பாடாங் மெர்போக் திடலில் ஜுன் 23 ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒலிம்பிக் தின ஒட்டம் “புகை மூட்டம்” மோசமடைந்து வருவதால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மலேசிய ஒலிம்பிக் மன்றத்துடன் கலந்தாய்வு செய்த பின்னர் அந்த ஒட்டத்தை உடல் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தள்ளி வைப்பது என முடிவு செய்யப்பட்டதாக மெக்டொனால்ட் மலேசியா தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் அதிகாரத்துவ முகநூல் பக்கத்திலும் அந்தத் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
ஜுன் 22ம் தேதி அதே திடலில் ஒலிம்பிக் மன்றம் ‘ஒட்டத்திற்கு’ ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருப்பதால் அந்த இடத்தை பக்காத்தான் ராக்யாட் தனது ‘ 505 கறுப்பு தின’ பேரணியை நடத்துவதற்குத் தர முடியாது என ஏற்கனவே கோலாலம்பூர் மேயர் அகமட் பெசால் தாலிப் கூறியிருந்தார்.
புகை பிடிக்காதீர் புகை பிடிக்காதீர் ,ஏன் சொல்கிறார்கள் ,உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என்று ,,இப்ப என்ன ஆச்சி ஒலிம்பிக் விளையாட்டை தள்ளி வச்சிட்டானுங்க ,