ஊராட்சிமன்ற உறுப்பினர் நியமங்கள் புறக்கணிக்கப்பட வேண்டும், குவா கியா சூங்

kua kia soongஊராட்சிமன்றங்களுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் பிரபுத்துவ முறைக்கு எதிராக அரசு சார்பற்ற அமைப்புகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்று சுவாராம் என்ற மனித உரிமை கழகத்தின் ஆலோசகர் டாக்டர் குவா கியா சூங் கூறுகிறார்.

ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் நியமங்கள் செய்யப்படும் முறையை தங்களுடைய “தனிச்சலுகை” என்று பாரிசான் மற்றும் பக்கத்தான் கூட்டணிகள் போட்டி போட்டுக்கொண்டு தற்காத்து வருகின்றன என்பதைக் காண முடிகிறது. அந்நியமனங்களின் வழி அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அவர்களை ஆதரிப்பவர்களுக்கு குத்தகைகளை வழங்கின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

இவ்வாறான ஊராட்சிமன்ற ஆட்சி முறையை முடிவுக்கு கொண்டு வரும் திட்டம் எதனையும் இவ்விரு கூட்டணிகளும் அவர்களுடைய தேர்தல் கொள்கை அறிக்கைகளில் குறிப்பிடவில்லை என்றாரவர்.

ஊராட்சிமன்ற உறுப்பினர் பதவிக்கு அரசுசார்பற்ற அமைப்புகளின் ஆர்வலர்களும், குடியிருப்பாளர்கள் மன்றங்களும்  முட்டியடித்துக் கொள்வதைக் காண முடிகிறது. இது நிறுத்தப்பட வேண்டும் என்றாரவர்.

சிலாங்கூர் மாநிலத்தின் புதிய ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் தெங் சாங் கிம்1 teng ஊராட்சிமன்றங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அவருடைய ஈடுபாட்டை வெளிப்படுத்தியுள்ளார். இது பாராட்டிற்குரியது.

அரசியல் திண்மை இருந்தால் அதனைச் சாதிக்க முடியும் என்பதை தெங்கின் நிலைப்பாடு காட்டுகிறது. இதற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று குவா அவரது அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

குவாவின் வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து சுபாங் ஜெயா நகராட்சிமன்ற உறுப்பினரும், சுவாராம் தலைவருமான கா. ஆறுமுகம் சுபாங் ஜெயா நகராட்சிமன்ற உறுப்பினர் பதவியைத் துறக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

TAGS: