உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று- கோலாலம்பூர் என ஒர் இணையத்தளம் ஒன்று ‘பட்டியலிட்டுள்ளதை’ அரச மலேசியப் போலீஸ் படை மறுத்துள்ளது.
அந்த இணையத் தளத்தில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் அந்தத் தகவலை நம்பவும் வேண்டாம் பரப்பவும் வேண்டாம் என போலீஸ் படையின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்தது.
“அந்தத் தகவல் ஆதாரமற்றது, போலீசிடம் அது குறித்து கேட்கப்படவில்லை,” என அது கூறியது.
“மலேசியர்கள் அதிகாரத்துவ வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்களை மட்டுமே பகிர்ந்து கொள்ள வேண்டும்.”
“2010 முதல் 2012 வரையில் அரச மலேசியப் போலீஸ் படை கோலாலம்பூரில் குற்றச் செயல் விகிதத்தை 31.8 விழுக்காடு குறைத்துள்ளது,” என்ற தனது குற்றச் செயல் புள்ளி விவரங்களையும் போலீஸ் படை அதில் வெளியிட்டுள்ளது.
‘கோலாலம்பூர் உலகில் மிகவும் ஆபத்தான 10 மாநகரங்களில் ஒன்று’ உண்மைதான் ,,இதை நான் ஒப்புகொள்கிறேன்