அழியா மை குளறுபடியில் ‘சதி’ ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை இசி ஆராயும்

inkகடந்த மாதம் நிகழ்ந்த பொதுத் தேர்தலில் அழியா மை பயன்படுத்தப்பட்ட  விஷயத்தில் சதிநாச அம்சங்கள் ஏதும் சம்பந்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு  செய்ய தேர்தல் ஆணையம் (இசி) சிறப்பு உள்- குழுவை அமைத்துள்ளது.

அந்த மை ஏன் நீண்ட காலத்திற்கு இருக்கவில்லை என்பதையும் எளிதாக அதனை  விரலிலிருந்து ஏன் அழிக்க முடிந்தது என்பதையும் கண்டு பிடிக்க ஆய்வு  முக்கியம் என இசி துணைத் தலைவர் வான் அகமட் வான் ஒமார் சொன்னார்.

அந்த விஷயங்களை ஆராய மூன்று ஆணையர்களுக்கு ஒரு மாத அவகாசம்  கொடுக்கப்படும் என அவர் சொன்னதாக பெரித்தா ஹரியான் செய்தி  வெளியிட்டுள்ளது.

“இசி-யில் பல தரப்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்களது நோக்கம் நமக்குத்  தெரியாது. ஆகவே உண்மையைக் கண்டறிய ஆழமான ஆய்வு தேவை,” என்றார்  அவர்.