KLIA2 இன்னொரு PKFZ-ஆக மாறுகிறதா?

உங்கள் கருத்து  ‘சுத்த மோசம்  என்கிறீர்களா. இறுதியில் திட்டத்துக்கான மொத்த செலவினமும் தெரியவரும். அப்போது என்ன சொல்வீர்களோ. வழக்கம்போல், பிஎன்னின் கோமாளித்தனங்களுக்கு நாம் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது’

டிஏபி: கேஎல்ஐஏ2 தாமதமாவதற்கு உண்மை காரணம் என்ன?

எப்ஏஎஸ்: அத்திட்டத்துக்கு நிதி வழங்கும் அரசாங்கத்தைப் பாதுகாப்பதற்காக மலேசிய விமான நிலைய ஹோடிங்ஸ் பெர்ஹாட் (எம்ஏஎச்பி) பலவற்றை மூடி மறைக்கும்.

உண்மை வெளிவந்தால் அரசாங்கத்தை ஆட்டி வைக்கும் என்பதால், வெளிவரும் என்று நினைக்கவில்லை.

தலைவெட்டி: சுத்த மோசம்  என்கிறீர்களா. இறுதியில் திட்டத்துக்கான மொத்த செலவினமும் தெரியவரும். அப்போது என்ன சொல்வீர்களோ. வழக்கம்போல், பிஎன்னின் கோமாளித்தனங்களுக்கு நாம் கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது.

குய்கோன்: கேஎல்ஐஏ2 இன்னொரு PKFZ-ஆக மாறி வருகிறது.

தைலெக் : இடைத்தரகர்களின் நன்மைக்காக செலவுகள் கூட்டிக்காண்பிக்கப்படுகின்றன.

சொர்க்கபுரி மன்னன்: நீண்ட தாமதம், கட்டுப்படுத்தப்படாத செலவினம், புளுகுமூட்டைகள்……எம்ஏஎச்பி தலைவர் பதவி விலக வேண்டும்.

ஆத்திரம் கொண்டவன்:  குத்தகைகளை வேண்டியவர்களுக்குக் கொடுத்தால் இதுதான் நடக்கும்.

சியாங்மாலாம் : கேஎல்ஐஏ2 விவகாரத்தில் பழிச்சொல்லுக்கு இலக்கான  UEMC-Bina Puri-க்கு பிரிக்பீல்ட்சில் ரிம1.2 பில்லியன் எம்ஆர்டி திட்டம் வழங்கப்பட்டுள்ளது.  இதே கூத்து அங்கும் அரங்கேறுமா?

தூரத்து மனிதன்: பார்த்துக்கொண்டே இருங்கள்,  UEMC-Bina Puri இழப்பீடுகளை வழங்காது. அப்படியே அவர்கள் கொடுத்தாலும் அந்த இழப்பீட்டுத் தொகை வேறு வகையில் ஈடு செய்யப்படும்.

கேம் சேஞ்சர்: என்ன சொல்வதென்றே தெரியவில்லை. திரும்பத் திரும்ப பொய் சொல்லி வந்திருக்கிறார்கள். என்றுதான் இந்தப் பொய்கள் ஓயுமோ?

மேலும் ஓராண்டு தாமதம் என்றால் மேலும் எவ்வளவு பணம்-அத்தனையும் மக்களின் பணம்- இந்தத் திட்டத்துக்காக செலவிடப்படப்  போகிறது?

எரிக்: முதலாவது விமானம் அங்கிருந்து புறப்படுவதற்குள் இன்னும் எத்தனை பில்லியனை விழுங்கப் போகிறதோ?