மலாயாப் பல்கலைக்கழகம்: ‘505 கறுப்பு தின’ பேரணியில் மாணவர்கள் கலந்து கொள்ளக் கூடாது

merbokநாளை கோலாலம்பூர் பாடாங் மெர்போக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘505  கறுப்பு தின’ பேரணி ‘சட்ட விரோதமானது’ என்பதால் அதில் கலந்து கொள்ள  வேண்டாம் எனத் தனது மாணவர்களை மலாயாப் பல்கலைக்கழகம்  எச்சரித்துள்ளது.

அத்துடன் ‘கோலாலம்பூரைச் சுற்றிலும்’ நடத்தப்படும் அந்தப் பேரணி
‘அதிகாரிகளிடமிருந்து அனுமதியைப் பெறத் தவறி விட்டதாகவும்’ அந்தப்  பல்கலைக்கழக மாணவர் விவகாரத் துறை கூறியது. ஆகவே மாணவர்கள்  அதிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என அது வலியுறுத்தியது.

“அந்தப் பேரணியில் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட வேண்டாம்  என மாணவர்களுக்கு நினைவூட்டப்படுகின்றது,” என அந்தத் துறை தனது முகநூல்  பக்கத்தில் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.