“இசி தலைவரை பதவி விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கிறது”

liewஇசி என்ற தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப்புக்கு  எதிராக பொது மக்கள் குறை கூறுவது அதிகரித்து வருவதால் அவரை பதவி  விலகுமாறு கேட்டுக் கொள்வது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதாக டிஏபி குளுவாங்  எம்பி லியூ சின் தொங் கூறிக் கொண்டுள்ளார்.

அஜிஸ் ராஜினாமா செய்ய வேண்டும் என அவரைக் கட்டாயப்படுத்துவது’ குறித்து  அரசாங்கம் பரிசீலிப்பதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சொன்னார்.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்து வரும் ‘505 கறுப்பு தின’
பேரணிகள் பலனளித்துள்ளதா என வினவப்பட்ட போது லியூ அவ்வாறு பதில்  அளித்தார்.

அஜிஸை விலகச் செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலிப்பதே பேரணிகள் மூலம்  மக்கள் தொடுக்கும் நெருக்குதல் பலன் தருவதற்கான அறிகுறி என்றார் அவர்.

ஆனால் அந்தத் தகவலில் உண்மை ஏதுமில்லை என அஜிஸ் மலேசியாகினி  தொடர்பு கொண்ட பின்னர் அனுப்பிய குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

TAGS: