ஹூசாம் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும், கிட் சியாங்

 

kit siang1பாஸ் கட்சியின் உதவித் தலைவர் ஹுசாம் மூசா இரு நாள்களுக்கு போலீஸ் காவலில் வைக்கப்பட்டைருப்பது அதிகார மீறலாகும்.  இது நற்சிந்தனையுடைய அனைத்து மலேசியர்களின் கண்டனத்திற்கும் உரியது என்று டிஎபியின் மூத்த தலைவர் இன்று விடுத்த செய்தி அறிக்கையில் கூறியுள்ளார்.

தேசநிதனைச் சட்டம் 1948 செக்சன் 4 இன் கீழ் போலீஸ் விசாரணைக்காக ஜுசாம் தடுத்து வைக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த அதிகார அத்துமீறல் என்பதோடு  அரசுத்துறைகளின் சுயேட்சை தன்மை, பாரபட்சமின்மை மற்றும் தொழிலியம் ஆகியவற்றில் எவ்வித உருமாற்றமும் ஏற்படவில்லை என்பதை இந்நடவடிக்கை காட்டுகிறது என்றாரவர்.

டாக்டர் மகாதீர் தொடர்ந்து தேசநிந்தனையான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். ஆனால், அவருக்கு எதிராக போலீஸ் எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. அவ்வாறே முன்னாள் மேல்முறையீட்டு நீதிபதி முகமட் நூரும் விசாரிக்கப்படவில்லை. ஏன் என்பதை மலேசியர்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றனர் என்று கிட் சியாங் மேலும் கூறினார்.

தப்பி ஓடும் அல்லது போலீசாருடன் ஒத்துழைக்க மறுக்கும் எண்ணம் ஹுசாமிடம் இல்லை. பிறகு ஏன் அவர் போலீஸ் காவலில் வைக்கப்பட வேண்டும் என்று அவர் வினவினார்.

TAGS: