அல்டான்துயா கொலையில் நஜிப்புக்குத் தொடர்பில்லை

1 altanஅல்டான்துயா கொலை வழக்கை நடத்தும் அரசுதரப்பு அந்த மங்கோலிய பெண்ணின் கொலையுடன் அப்போது துணைப் பிரதமராக இருந்த நஜிப்பைத் தொடர்புப்படுத்த எந்தக் காரணமுமில்லை என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் கூறியது.

வழக்கின் முதல் குற்றவாளி தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹட்ரி “தம்முடைய செயலுக்குத் தாமே பொறுப்பு”என்று ஒப்புக்கொண்டிருப்பதை துணை சொலிடிடர்-ஜெனரல் III துன் அப்துல் மஜிட் துன் ஹம்சா  சுட்டிக்காட்டினார்.

கொலைக்கு உடந்தை என்று குற்றம்சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பாகிண்டாவுக்கு நஜிப்பைத் தெரியும் என்பதற்காக நஜிப்பைக் கொலையுடன் தொடர்புப்படுத்துவது சரியல்ல என்றவர் தம் வாதத் தொகுப்பில் கூறினார்.