முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், தம் புதல்வர் முக்ரிஸ் மகாதிரை அம்னோவின் உதவித் தலைவர்களில் ஒருவராக்க வேலை செய்து வருகிறார் என்று டிஏபி-இன் குளுவாங் எம்பி லியு சின் தொங் கூறினார்.
அதற்காக நடப்பு உதவித் தலைவர்களில் ஒருவராக உள்ள அஹமட் ஜஹிட் ஹமிடியை அப்பதவியிலுருந்து அகற்றுவதுதான் மகாதிரின் திட்டம் என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “ஜஹிட்டை அவருக்குப் பிடிக்காது”.
1998-இல் ஜஹிட், வேண்டியவர்களுக்கே சலுகை செய்கிறார் என்று மகாதிருக்கு எதிர்ப்புக் காட்டியவர். அதன் விளைவாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.
நடப்பு உதவித் தலைவர்களான மற்ற இருவரில் ஒருவர் ஷாபி அப்டால்; இன்னொருவர் ஹிஷாமுடின் உசேன்.
என்ன அரசியல் விளையாட்டு இது? ரசாக் – நஜிப், உசின் ஓன் – ஹிசமுடின், மகாதிர் – முக்ரிஸ். இப்படி இவ்மூவருடைய குடும்பமே மாறி-மாறி பிரதமர் பதவி வகித்தால் மற்ற மலேசியர்கள் என்ன செய்வது?
இந்த கருத்தை ஏற்கனவே நான் கூறியுள்ளேன் ! அதுமட்டும் அல்ல, தந்தைக்குப்பின் தனயன் வரவேண்டும் என்பதே மகாதீரின் விடா முயற்ச்சி. ஆதாயம் இல்லாமலா இவ்வளவு காலம் சீண்டிக்கொண்டு இருக்கிறார். அவர்காலதிலேயே தன் மகன் பிரதமராக வேண்டும் ! சூனியக்காரன் , சும்மா இருக்கமாட்டான். பொறுத்திருந்து பாருங்கள்.
ம் இன்னும் என்னனடக்கபோகுதோ
எவன் எவனுக்கோ சாவு வருது….ஆனால் ஒட்டுமொத்த மக்களே எதிர்பார்க்கும் ஒருத்தனுக்கு வர மாட்டேங்குது!!!
இதெல்லாம் அரசியலில் சகஜம் அப்பா .