ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூடக்கூடாது: சுற்றுலா அமைச்சர்

nasriசுற்றுலா அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ், ஜோங்கர் சாலை இரவுச் சந்தையை மூட வேண்டாம் என்று மலாக்கா முதலமைச்சர் (சிஎம்) இட்ரிஸ் ஹருனைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

இன்று நாடாளுமன்றத்துக்கு வெளியில், செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி.  அந்த இரவுச் சந்தை மலாக்கா சுற்றுலா துறையின் இன்றியமையா பகுதியாக விளங்குகிறது என்பதால் அதை மூடக்கூடாது என்றார்.

“இன்று சிஎம்முடன் பேசினேன். நான்கு வாரங்களுக்குச் சோதனை அடிப்படையில் அது மூடப்பட்டு வாகனங்கள் நிறுத்தும் பிரச்னைக்கு அது தீர்வாக அமைகிறதா என்று ஆராயப்படும் என்றவர் சொன்னார்”.

நான்கு வாரங்களுக்குப் பின்னர் அது மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக நஸ்ரி குறிப்பிட்டார்.