மே 5 பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் மோசமான அடைவு நிலையைப் பெற்றதைத் தொடர்ந்து அந்த மாநில அம்னோ தலைவராக தஞ்சோங் காராங் எம்பி நோ ஒமார் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அவருடைய நியமனத்தை அந்த மாநிலத்திலுள்ள பெரும்பாலான அம்னோ தொகுத் தலைவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
நோ சிலாங்கூர் அம்னோ தலைவராக நியமிக்கப்பட்டால் மாநில பிஎன்
தலைவராகவும் பொறுப்பேற்பார்.
கடந்த மாதத் தேர்தலில் பிஎன் மாநிலச் சட்டமன்றத்தில் 12 இடங்களை மட்டுமே பிடித்தது. பக்காத்தான் 44 இடங்களை வென்றது.
நோ நியமனத்துக்கு நஜிப் ஒப்புதல் தெரிவித்து விட்டதாகவும் பெரும்பாலும் வெள்ளிக்கிழமை அதிகாரத்துவ அறிவிப்பு வெளியாகும் என்றும் அந்த ஏடு தெரிவித்தது.
கொம்பனே வந்தாலும் சரி , பிரித்துவாலும் போக்கை கையாண்டால், “அனாக் இமாஸ்” , “அனாக் சுவசா” என்று மற்ற இனத்தை புறம் தள்ளினால் நீ வெறும் கம்புதான் !!! மக்கள் என்னும் பூங்கொடி கம்புமேல் படரபோவதில்லை!! மோழையாகவே காட்சிதருவாய்!!
வாழ்த்துகள், அம்னோவில் நல்ல மனிதர்களுக்கு பஞ்சம் என்பது யாவரும் அறிந்த்தே! இன்னும் 10 வருஷத்துக்கு பக்காத்தானை அம்னோ அசைக்க முடியாது.