கார் விலைகளை குறைக்கும் பொருட்டு கலால் வரியை குறைக்க அரசாங்கம் எண்ணவில்லை.
இவ்வாறு அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாப்பா முகமட் கூறுகிறார்.
“வாகனங்களுக்கான கலால் வரியைக் குறைக்க அரசாங்கம் திட்டமிடவில்லை. ஏனெனில் அது நாட்டுக்கு முக்கியமான வருமான ஆதாரமாகும்,” என்றார் அவர்.
நாட்டின் வரவு செலவுப் பற்றாக்குறையை குறைப்பதற்கும் கார் கலால் வரி அவசியமாகும்..”
“அந்த வரியை அகற்றினால் நாட்டுக்கு ஆண்டுக்கு 7 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பு ஏற்படும். அதனால் வரவு செலவுப் பற்றாக்குறையை குறைக்கும் அரசாங்க முயற்சிகள் சிக்கலாகும்.” என்றும் அவர் சொன்னார்.
அப்படி போடு இதுதாண்டா BN