அன்வார்: அரச உரை ஆணையல்ல, விவாதத்திற்கு உரியது

agongநாடாளுமன்றத்தில் யாங் டி பெர்துவான் அகோங் ஆற்றிய உரை மக்களவைக்கு  கொடுக்கப்படும் ‘உத்தரவு அல்ல’ என எதிரணித் தலைவர் அன்வார் இப்ராஹிம்  கூறுகிறார்.

நாட்டுத் தலைவர் ஒருவர் என்ற முறையில் நிர்வாகியின் கருத்துக்கள் வாதங்கள்  ஆகியவற்றை கொண்டது அந்த அரச உரையாகும் என அவர் சொன்னார்.  அதனால் அதனை மக்களவை விவாதிக்கலாம் என்றார் அவர்.

“அகோங் உரை என்பது அரியணையிலிருந்து நிகழ்த்தப்படும் உரையாகும்.  அதனைப் பரிசீலினைக்காக பிரதமர் சமர்பிக்கிறார்.”

13வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய பின்னர்  அன்வார் நிருபர்களிடம் பேசினார்.

அரச உரை பிஎன் சார்பாக இருப்பதாகவும் கடந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக்  கொள்ளுமாறு அறிவுரை கூறுவதாகவும் அன்வார் ஏற்கனவே தெரிவித்திருந்த  கருத்துக்கள் பற்றி வினவப்பட்ட போது அவர் அவ்வாறு சொன்னார்.