“நாட்டை அழிக்கக் கூடிய எதனையும் செய்ய வேண்டாம்” என யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா, எம்பி-க்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.
13வது பொதுத் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொண்ட அவர், எம்பி-க்கள் நாட்டுக்கு பிளவுபடாத விசுவாசத்தை காட்ட வேண்டும் என்றும் மாமன்னர் புதிய நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரில் அரச உரையாற்றிய போது வலியுறுத்தினார்.
“நாட்டை அழிக்கக் கூடிய எதனையும் செய்ய வேண்டாம். குழப்பத்தினால் அழிக்கப்படும் எந்த நாடும் பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்படும் எந்த நாடும் குறுகிய காலத்துக்குள் மீட்சி பெற முடியாது,” என துவாங்கு ஹலிம் சொன்னார்.
“எல்லா எம்பி-க்களும் வேறுபாடுகளைக் களைந்து நாட்டை மேம்படுத்த வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்,” என்றும் அகோங் குறிப்பிட்டார்.
இதுக்கு மட்டும் வாயை திறப்பாங்க ,13 வது தேர்தலில் தில்லு முள்ளு பன்னுனானுங்க்கள ,இதுக்கு வாயை திறக்க வேண்டியதுதானே ,சுண்டக்கா பயலே
நமது மாமன்னரின் நினைவூட்டல் மாநில ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும். முதலில் மலாகா மந்திரி பெசார் மாற மண்டைக்கு புரியணும் !!
யாரு சார் நாட்டை அழிக்க நினைப்பார்.