சுமத்ரா தீவில் மூண்ட காட்டுத் தீயினால் எழுந்த புகை மூட்டத்தினால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுகளிடம் இந்தோனிசிய அதிபர் சுசிலோ பம்பாங் யூதயோனோ மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்று மாலை அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூரிடமும் மலேசியாவிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் அவ்விரு நாடுகளும் அந்தப் பிரச்னை தொடர்பில் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.
“நான் எங்கள் சகோதரர்களான சிங்கப்பூரிடமும் மலேசியாவிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு நிகழவேண்டும் என இந்தோனிசியா ஒரு போதும் எண்ணியதில்லை. அதனைச் சமாளிப்பதற்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம்,” என சுசிலோ சொன்னதாக அரசாங்க இணையத் தளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமாங்க்கட ,வருஷம் வருஷம் புகைய முட்டிவிட்டுபுட்டு மன்னிப்பு கேளுங்கடா ,இதே ஒரு பொழப்பு போச்சிடா
யாரோ தவறு செய்கிறார்கள். நீங்கள மன்னிப்புக் கேட்கிறீர்கள்.அது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. இங்குள்ள அரைகுறைகளால் இப்படியெல்லாம் செய்ய முடியாது!