சுற்றுச்சூழல் அமைச்சருக்கு நெருக்குதல் அதிகரிக்கிறது

hazeநாட்டைப் பாதித்துள்ள புகை மூட்டத்துக்குப் பொறுப்பானவை எனக் கூறப்படும்  மலேசிய நிறுவனங்களுடைய அடையாளங்களை வெளியிடுமாறு புத்ராஜெயாவைக்  கட்டாயப்படுத்தும் கோரிக்கைக் கடிதம் ஒன்றை சிவில் சமூக அமைப்பு ஒன்று  வெளியிட்டுள்ளது.

இயற்கை வள, சுற்றுச்சூழல் அமைச்சர் ஜி பழனிவேல் அந்தக் கடிதத்திற்குச் செவி சாய்க்கா விட்டால் கவனக் குறைவாக இருந்ததற்காகவும் நம்பிக்கை மோசடி செய்ததற்காகவும் அவர் மீது வழக்குப் போடப்படும் என Memacu Arus  Perjuangan (MAP) கூறியது.

“அரசமைப்பின் கீழ் அரசாங்கம் மக்களை பாதுகாக்க வேண்டிய கடமையைக்  கொண்டுள்ளது,” என அந்த அமைப்பின் வழக்குரைஞர் பாட்ரிக் தாஸ் கூறினார்.haze1

“அரசாங்கம் பிரஜைகளை பாதுக்காக்கத் தவறியதின் மூலம் அது அந்த  நம்பிக்கையை மீறி விட்டது.”

நேற்று மாலை 4 மணிக்கு அந்த நோட்டீஸ் பழனிவேலுக்கு வழங்கப்பட்டது  என்றும் அமைச்சர் ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் MAP  தெரிவித்தது.

 

 

TAGS: