மலேசியாவுக்கு தேர்தல் நடைமுறையின் ஒரு பகுதியாக அழியா மை இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் சொல்கிறார். காரணம் நாம் ‘மூன்றாம் உலக நாடு’ இல்லை என்றார் அவர்.
அவர் இன்று மக்களவைக்கு வெளியில் நிருபர்களிடம் பேசினார். ‘எதிர்க்கட்சிகள் அதனை விரும்பியதால்’ தான் அழியா மைக்கு ஒப்புக் கொள்ளப்பட்டது என அவர் சொன்னார்.
“எதிர்க்கட்சிகள் அதனை விரும்பின. ஆகவே நாடாளுமன்றம் அதற்கு ஒப்புக் கொண்டது. என்றாலும் அந்த மையில் அளவுக்கு அதிகமாக இரசாயனப் பொருட்களைக் கலப்பது மக்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல,” என்றார் தெங்கு அட்னான்.
“இந்தியாவில் அது ஒரு மாதம் முதல் இரண்டு மாதங்கள் வரையில் இருக்கிறது. அது ஆரோக்கியமானது அல்ல,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாம் மூன்றாம் உலக நாடுகள் இல்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள்?கல்விக்குக் கூட தரம் தேவை இல்லை என்று சொல்லும் நாடு உலகிலேயே நாம் மட்டும் தான்! மூன்றாம் உலக நாடுகள் கூட அப்படிச் சொல்வது இல்லையே!
உடனே அழிந்தால்தான் உரிமையை விற்கமுயும் போலும் , பாவம் எத்துனை பேர்தான் கஷ்டப்ட்டர்களோ ????
புகைமூட்டம் மிகவும் ஆரோக்கியமானது? ஊழல் மிகவும் ஆரோக்கியமானது..? கண்கானிக்கப்படாத உணவகங்கள், குடியிருப்புகள், பேருந்து நிலையங்கள், சுத்தப்படுத்தப்படாத கால்வாய்கள்,நதிகள் இவையெல்லாம் ஆரோக்கியமானது. ஆனால் அழியாமை மாத்திரம் மக்களின் ஆரோக்கியத்திற்கு பெரும் குந்தகம் விளைவித்துவிடும்! ஜனநாயகத்தில் நாம் மூன்றாம் உலகநாடுகளின் தரத்தை எட்டியிருக்கிறோமா என்று மனசாட்சியுடன் எண்ணிப்பாருங்கள்! தயவு செய்து உங்கள் வெறும் பீற்றலை கொஞ்சம் அடக்குங்கள்!
அப்படின்னா எதிர் கட்சிகள் எதை விரும்பிநாளும் கொடுப்பிர்களா? நீங்கள் சொல்வது உண்மையென்றால் எங்கே கேட்பதையெல்லாம் கொடுங்க பார்ப்போம்…அழியா மை என்றால் அழியக்கூடாது…முதலில் இதற்கு விளக்கம் தாருங்கள் பார்ப்போம்…100 கோடிக்கு மேல் வாழும் மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வராத வியாதியா இங்கே வர போகுது? ஏண்டா உங்க வாயை திறந்தால் உண்மையே பேச வராதா? அப்படி வியாதி வந்தால் நீங்கள் லஞ்சமாக வாங்குகிற பணத்தை எடுத்து மக்களுக்கு வைத்தியம் பாருங்கடா…நடப்பதை பற்றி பேசுங்கடா …………………….திருடனும்னு முடிவு பண்ணிட்டிங்க…இன்னும் எவ்வளவு பொய் சொல்லனும்னு தோணுதோ சொல்லுங்க…
தேர்தல் ஊழலில் பெரும் பங்கு இவனுக்குத்தான் இருக்கிறது…