அரசாங்கம் மேலும் ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்டி-யை முடக்கி வைக்கிறது.

GSTஅரசாங்கம் மேலும் ஆய்வு செய்வதற்காக ஜிஎஸ்டி என்ற பொருள் சேவை  வரியின் அமலாக்கத்தை முடக்கி வைத்துள்ளது.

மலேசியாவில் அதனை அமலாக்குவதற்கு பொருத்தமான நேரம், குறைந்த  வருமானம் பெறும் மக்களுக்கு அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களிலிருந்து  பாதுகாப்பது ஆகியவை அந்த ஆய்வின் நோக்கங்களாகும்.GST1

“2008ம் ஆண்டு நாங்கள் ஜிஎஸ்டி மசோதாவை முதல் வாசிப்புக்குத் தாக்கல்  செய்தோம். ஆனால் பல தரப்புக்களுடன் கலந்தாய்வு செய்த பின்னர் நாங்கள்  அதனை மீட்டுக் கொண்டோம். மக்களுக்கு அது சுமையை ஏற்படுத்தாமல்  இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு அந்த முறையை மேம்படுத்துவதில் நாங்கள்  இப்போது கவனம் செலுத்துகிறோம். நாங்கள் இப்போது நடத்தும் ஆய்வும் அது
தான்,” என இரண்டாவது நிதி அமைச்சர் அகமட் ஹுஸ்னி ஹனாட்ஸ்லா கேள்வி  நேரத்தின் போது கூறினார்.

 

TAGS: