அந்நிய நேரடி முதலீட்டு (எப்டிஐ) நம்பிக்கை குறைந்ததற்கு, அரசாங்கத்தின் உருமாற்றத்தின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதுதான் காரணமாகும் என்று பெட்டாலிங் ஜெயா உத்தாரா எம்பி டோனி புவா கூறுகிறார்.
AT Kearney’s 2013 எப்டிஐ நம்பிக்கை குறியீட்டுப் பட்டியலில் கடந்த ஆண்டில் 10வது இடத்தில் இருந்த மலேசியா இவ்வாண்டில் 25வது இடத்துக்குச் சரிந்திருப்பதாக நிதியியல் நாளேடான தி எட்ஜில் வெளிவந்துள்ள அறிக்கை குறித்து அவர் கருத்துரைத்தார்.
இந்த வீழ்ச்சி அரசாங்கத்தின் வாக்குறுதிகள்மீது நம்பிக்கை குறைந்துவிட்டதைக் காண்பிக்கிறது என்றாரவர்.
“அது வெறும் பேச்சுத்தான். விசயமில்லை”, என்றார்.