‘மதமாற்றச் சட்டத்தை மாற்ற அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் தேவை’

1 christopherகூட்டரசு பிரதேச இஸ்லாமிய சட்டத்தில் சிறார் மதமாற்றத்துக்கு பெற்றோரில் ஒருவர் சம்மதித்தால் போதும் என்ற திருத்தத்தைச் செய்வதற்குமுன் முதலில் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியிருக்கும் என்கிறது மலேசிய வழக்குரைஞர் மன்றம்.

“பெற்றோரில் ஒருவர், மதம்-மாறா மற்றொரு பெற்றோரின் ஒப்புதலின்றி சிறு பிள்ளைகளை ஒருதலைப்பட்சமாக மதமாற்றம் செய்வது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்”, என அம்மன்றத்தின் தலைவர் கிறிஸ்டபர் லியோங் கூறினார்.

அரசமைப்புச் சட்டத்தில்  பெற்றோர் என்ற சொல் ஒரு பன்மைச் சொல்; அது, தாய்- தந்தையர் இருவரையும் குறிக்கிறது என்றாரவர்.

TAGS: