திரெங்கானுவில் தொங்கு சட்டமன்றத்துக்கு வாய்ப்பில்லை

trengganuதிரெங்கானுவில் இடைத் தேர்தலில் எதிரணி வெற்றி பெற்றால் சட்டமன்றத்தில் பிஎன் 16 இடங்களைப் பெற்றிருக்கும். பக்காத்தான் ரக்யாட்டும் 16 இடங்களைப் பெற்றிருக்கும்.

அப்படிப்பட்ட நிலையில் அங்கு தொங்கு சட்டமன்றம் ஏற்படுமா என்றால் இருதரப்பு அரசியல்வாதிகளும் ஏற்படாது என்கிறார்கள்.

சட்டமன்றத் தலைவருக்கும் வாக்குரிமை உண்டு. அந்த வாக்குபலத்தில் பிஎன் ஆட்சியைத் தொடர முடியும் என்று திரெங்கானு மசீச தலைவரும் முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினருமான தோ சின் யாவ்  கூறினார்.

அதை பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவாவும் ஒப்புக்கொண்டார்.

“சட்டமன்றத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவரோ இல்லையோ அவருக்கும் வாக்குரிமை உண்டு. இழுபறி நிலை ஏற்படும்போது பயன்படுத்தப்படும் அறுதி வாக்கு அது.”, என்றாரவர்.