ஏ குகன் தீர்ப்பை இரண்டு நாட்களுக்கு முன்னர் வழங்கிய கோலாலம்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி விடி சிங்கம், 13 ஆண்டுகள் நீதித் துறையில் பணியாற்றிய பின்னர் ஒய்வு பெற்றுள்ளார்.
நீதிபதி சிங்கம் இன்று தமது 65வது வயதில் ஒய்வு பெறுகிறார். தாம் ஒய்வு பெறும் வயதை அவர் தேர்வு செய்துள்ளதாக நீதித் துறையின் நிறுவனத் தொடர்பு, அனைத்துலக உறவுகள் துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வழக்கமாக கூட்டரசு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள் உட்பட எல்லா
நீதிபதிகளும் கட்டாய ஒய்வு வயதான 66 வயது வரை பணியாற்ற முடியும்.
வழக்குரைஞராக இருந்த சிங்கம் ஈராயிரத்தாவது ஆண்டு உயர்நீதிமன்ற
நீதித்துறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் 2002ம் ஆண்டு முழு உயர் நீதிமன்ற நீதிபதியாக உறுதி செய்யப்பட்டார்.
சரித்திரம் உம்மை பேசும்
நீர் உண்மை பேசியதால் .!
தங்கம் தங்கம் தான்
சிங்கம் சிங்கம் தான் .
டத்தோ சிங்கம் அவர்களே!!!!! நீங்கள் நீதியின் சிங்கம் என்பதை குகன் தீர்ப்பில் நிரூபித்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்….
வாழ்த்துக்கள்!!! நீங்கள்தான் உண்மையான சிங்கம்.!!! தமிழன் தலை நிமிர்ந்தான் இன்று.!!
என்ன நடக்கிறது என்று புரிய வில்லை.நடப்பது நன்மையாக இருக்கட்டும்.
டத்தோ கணம் முன்னால் நீதிபதி சிங்கம் அவர்களே ! நீதி வழுவா கொள்கையில் இரூந்து நீங்கள் நீதி தேவதையின் கட்டுப்பாட்டில் உங்களின் கடமையை ஆற்றி இருக்கிறீர்கள். பணத்திற்கும் , பதவிக்கும் மற்றும் பதகங்களுக்கும் அரசாலும் கட்சியின் பகடை காயாக மாறாமல் தர்மத்தையும் நீதியையும் சிறிதும் பிசராமல் வழங்கிய மாமனிதர் நீங்கள். சரித்திரம் உங்களை மறக்காது. வாழ்க நமது சமுதாயம் .