‘தேக்க நிலை உருவானால் சுல்தான் சட்டமன்றத்தைக் கலைக்க முடியும்’

azizதிரங்கானு சுல்தான் தேக்க நிலை ஏற்பட்டு  மந்திரி புசாராக  நியமிக்கப்படுவதற்கு யார் சிறந்தவர் என்பதைத் தீர்மானிக்க முடியாது போனால்  அவர் மாநிலச் சட்டமன்றத்தைக் கலைக்க முடியும் என அரசமைப்பு வல்லுநர்  அப்துல் அஜிஸ் பேரி கூறுகிறார்.

சட்டமன்றத்தில் தொங்கு நிலை ஏற்படுமானால் மந்திரி புசார் நியமனத்தை  சுல்தான் முடிவு செய்யலாம் என்று முன்னாள் சட்டப் பேராசிரியரான அஜிஸ்  சொன்னார்.aziz1

திரங்கானுவில் கோலா பெசுட் இடைத் தேர்தலில் பாஸ் கட்சி வெற்றி பெற்றால்  தொங்கு சட்டமன்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் மீது கருத்துரைக்குமாறு கேட்டுக்  கொள்ளப்பட்ட போது அஜிஸ் அவ்வாறு கூறினார்.

அந்த மாநிலச் சட்டமன்றத்தில் 32 இடங்கள் உள்ளன. கடந்த தேர்தலில் பிஎன் 17  இடங்களையும் பாஸ் 15 இடங்களையும் வென்றன.

அண்மையில் பிஎன் கோலா பெசுட் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ மொக்தார்  காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.