தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்க உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு, அச்சங்கம் 60வயது பணி ஓய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்படி தெலிகாம் மலேசியா (டிஎம்) நிர்வாகத்தை வற்புறுத்தவில்லை என்பதற்காக பங்சாரில் உள்ள சங்கக் கட்டிடத்தில் நேற்றுக் காலை கண்டனக் கூட்டமொன்றை நடத்தியது.
குறைந்தபட்ச பணிஓய்வு வயது சட்டம் ஜூலை முதல் நாளில்தான் அமலுக்கு வருகிறது என்றாலும் அதை முன்கூட்டியே அமல்படுத்த நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று அக்குழுவின் பேச்சாளர் பி.பசுபதி கூறினார்.
“டிஎன்பி செய்திருக்கிறது டிவி3 செய்திருக்கிறது. ஏன் இங்கு மட்டும் செய்யவில்லை?”
சங்கம்தான் இதற்குக் காரணம் என்று பசுபதி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.