மசீச: மதம் மாற்ற மசோதா தேசிய சமரசத்துக்கு எதிரானது

Ganகுழந்தைகள் மதம் மாற்றம் சம்பந்தப்பட்ட கூட்டரசுப் பிரதேச இஸ்லாமியச் சட்டத்  திருத்தம் ‘வஞ்சமாக’ தாக்கல் செய்யப்பட்டுள்ளது என மசீச சாடியுள்ளது.

அந்த மசோதா முஸ்லிம் அல்லாதாருடைய உரிமைகளை மீறுவதால்  ‘அதிர்ச்சியளிக்கிறது’ என்றும் அதன் உதவித் தலைவர் கான் பிங் சியூ ஒர்  அறிக்கையில் கூறினார்.

“அந்த மசோதா அதிகம் பேசப்படும் தேசிய சமரசத்துக்கு எதிராகவும் உள்ளது,”  என்றார் அவர்.

“parent” என்பதற்கான விளக்கத்தை அந்தத் திருத்தம் மாற்றி பெற்றோர்களில்  ஒருவர் குழந்தைகளை மதம் மாற்றுவதற்கு போதுமானது என அந்தத் திருத்தம்  கூறுகிறது.

குழந்தைகளை மதம் மாற்றுவதற்கு இரு பெற்றோர்களின் ஒப்புதலும் தேவை என  அமைச்சரவை 2009ம் ஆண்டு ஏப்ரல் 22ல் எடுத்த முடிவுக்கு மாறாகவும் அந்தத்  திருத்தம் உள்ளது என்றும் கான் சொன்னார்.

“அது நமது நாட்டின் சமய ஒற்றுமையையும் தேசிய ஐக்கியத்தையும் கடுமையாக  பாதிக்கும்,” என்றார் அவர்.