‘ஆவணங்கள் பெருவாரியாக இருப்பதால் தாயிப் மீதான புலனாய்வுக்கு காலம் பிடிக்கிறது’

taibசரவாக் முதலமைச்சர் தாயிப் மாஹ்முட்-டுக்கு எதிரான ஊழல் புகார்களை  விசாரிக்கும் எம்ஏசிசி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய புலனாய்வாளர்கள்  பெருவாரியான ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அத்துடன்  சாட்சிகளும் நாடு முழுவதும் நிறைய உள்ளனர். அதனால் தாயிப் மீதான  புலனாய்வு நீடித்துக் கொண்டே போகிறது.

இவ்வாறு அதன் புலனாய்வுப் பிரிவு செயலகத்தின் துணை ஆணையர் லிம் பீ  கியான் புத்ராஜெயாவில் எம்ஏசிசி தலைமையகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

எம்ஏசிசி இதுநாள் வரை 400க்கும் மேற்பட்ட கோப்புக்களை ஆய்வு செய்துள்ளது  என்றும் அந்தப் புகார்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என நம்பப்படும் 20  தனிநபர்களிடமிருந்தும் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளது என்றும் லிம்  சொன்னார்.

 

TAGS: