சபாவில் அந்நியர்களுக்குச் சட்டவிரோதமாக குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதை விசாரிக்கும் அரச ஆணையத்தின் முன்பு சாட்சியமளிப்பதற்கு முன்னதாக முக்கியமான சாட்சியான எம்டி முத்தாலிப் என்ற அப்துல் முதாலிப் டாவுட் காலமானார்.
51 வயதான அவர் நேற்று அதிகாலை மணி 3.00க்கு காலமானார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது.
முன்னாள் அம்னோ அடித்தட்டுத் தலைவரான முத்தாலிப், ‘அடையாளக் கார்டு திட்டம்’ என அழைக்கப்பட்ட- அந்நியர்களுக்குச் சட்டவிரோதமாக குடியுரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்படுவதை அம்பலப்படுத்தி அரசாங்கத்தைக் கடுமையாகக் குறை கூறி வந்தார்.
அவர் அந்த ‘அடையாளக் கார்டு திட்டம் தொடர்பாக ‘IC Projek: Agenda
Tersembunyi Mahathir?’ (அடையாளக் கார்டு திட்டம்: மகாதீரின் மறைவான திட்டம்), ‘IC Palsu: Merampas Hak Anak Sabah’ (போலி அடையாளக் கார்டுகள்: சபா மக்களுடைய உரிமைகளை பறிப்பது),‘007: Lelaki Malaysia Terakhir’ (007: கடைசி மலேசியன்) என்னும் தலைப்புக்களில் புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
கரெக்ட்டாக ஒவ்வொருமுறையும் உண்மைக்கு சாட்சி அளிக்கும்போது மட்டும்.. சாட்சிகள் திடீர் என்று மாரடைப்பால் இறந்து விடுகிறார்களே …! சாபஷ் …நடத்துங்கள் நாடகத்தை …!!!!