மதமாற்ற சட்டமசோதாவை நிறுத்த குருத்வார்களும் கோரிக்கை

Gurthuwaraமலேசிய குருத்வார் மன்றமும் (எம்ஜிசி),  பெற்றொரில் ஒருவரின் ஒப்புதலுடன் சிறார்களை மதமாற்றம் செய்ய வகைசெய்யும் சட்டமசோதாவை அரசாங்கம் மீட்டுக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுப்போருடன் இப்போது சேர்ந்துகொண்டிருக்கிறது.

“பெற்றோரில் ஒருவர் தன் குழந்தையைத் தன்மூப்பாக மதமாற்றுவது அரசமைப்புக்கு விரோதமானது என்பதுடன் தார்மீக ரீதியாகவும் மனசாட்சியின்படியும் நீதியின்படியும் தப்பான செயலாகும்….என்பதை எம்ஜிசி வலியுறுத்த விரும்புகிறது”, என எம்ஜிசி தலைவர் ஜாகிர் சிங் நேற்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.

அதே மசோதாவின் பகுதி 51(3)(b)(xi), இறந்த ஒரு மனிதர் முஸ்லிமா அல்லது முஸ்லிம்-அல்லாதவரா என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை ஷியாரியா நீதிமன்றத்துக்கு வழங்குவதையும் எம்ஜிசி எதிர்க்கிறது.

அந்த அதிகாரமும் அரசமைப்பு விதிகளுக்கு விளக்கமளிக்கும் அதிகாரமும் சிவில் உயர் நீதிமன்றங்களுக்கே உண்டு என்றும் அது கூறியது.