மலாக்கா அரசாங்கம் செவிமடுக்கத் தயார் ஆனால் சோதனை செய்ய விரும்புகிறது

jonkerமலாக்கா அரசாங்கம் ஜோங்கர் வாக் சர்ச்சை தொடர்பில் பல்வேறு தரப்புக்களின்  கருத்துக்களைச் செவிமடுக்கத் தயாராக உள்ளது. என்றாலும் அந்தப் பகுதியில்  ஏற்படும் போக்குவரத்து நெரிசலைப் போக்க ஒத்துழைக்குமாறு   சுற்றுலாவுக்கு பொறுப்பான அதன் துணை ஆட்சி மன்ற உறுப்பினர் கசாலி  முகமட் கேட்டுக் கொண்டார்.

“அந்தச் சாலையை மூடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுமா என்பதை  அடுத்த நான்கு வாரங்களில் அறிய நாங்கள் விரும்புகிறோம்.”

“ஆனால் இப்போது வார இறுதி நாட்களில் அங்காடிக்காரர்கள் வாகனப்
போக்குவரத்து நிகழ இடம் கொடுக்காத போது நாங்கள் எப்படிச் சோதனை செய்ய  முடியும் ?” என அவர் வினவினார்.

குறுகலான அந்த ஜோங்கர் சாலை இரவுச் சந்தைக்காக வெள்ளிக்கிழமை முதல்  ஞாயிற்றுக்கிழமை வரையில் ஒவ்வொரு இரவிலும் போக்குவரத்துக்கு  மூடப்படுகின்றது. அந்த இரவுச் சந்தை சுற்றுப்பயணிகளை கவரும் அம்சமாகத்
திகழ்கின்றது.