’51 மில்லியன் ரிங்கிட் செலவான ஜிஎஸ்டி குழுவின் முடிவுகள் என்ன?

GSTஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை அமலாக்குவதற்கான ஆய்வுக்காக  அமைக்கப்பட்ட 51 மில்லியன் ரிங்கிட் குழுவின் முடிவுகளை வெளியிடுமாறு  குளுவாங் எம்பி லியூ சின் தொங் அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

“மக்கள் நலன்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் அரசாங்கம் ஜிஎஸ்டி ஆய்வை மறைக்கக்  கூடாது என பக்காத்தான் ராக்யாட்டும் மலேசிய மக்களும் விரும்புகின்றனர்,” என  அவர் இன்று விடுத்த அறிக்கையில் கூறினார்.GST1

அந்த ஆய்வை நடத்த நியமிக்கப்பட்ட ஆலோசகர் நிறுவனங்களின் பெயர்களை  வெளியிடுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

ஜிஎஸ்டி மீது 2009ம் ஆண்டு ஆய்வு நடத்தப்பட்டது என்றும் நிலைமை இப்போது  மாறி விட்டதால் இன்னொரு ஆய்வு தேவைப்படுகின்றது என்றும் இரண்டாவது  நிதி அமைச்சர் ஹுஸ்னி ஹானாட்ஸ்லா கடந்த வியாழக் கிழமை  நாடாளுமன்றத்தில் விடுத்த அறிக்கை குறித்து லியூ கருத்துரைத்தார்.

 

TAGS: