‘BR1M பணத்தைக் குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சமமாக பகிர்ந்தளிக்கப்படும்’

BRIMBR1M எனப்படும் ஒரே மலேசியா உதவித் தொகையை கணவனுக்கும்  மனைவிக்கும் சமமாக பிரித்துக் கொடுப்பது பற்றி அரசாங்கம் பரிசீலித்து  வருகின்றது.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது நிதித் துணை அமைச்சர் அகமட்  மஸ்லான் அந்தத் தகவலை வெளியிட்டார்.

குடும்பத்தில் உள்ள ஆணுக்கும் பெண்ணுக்கும் அந்த உதவித் தொகையில் பங்கு  கிடைப்பதை உறுதி செய்யுமாறு அரசாங்கத்துக்கு யோசனை கூறப்பட்டுள்ளதாக  அவர் மேலும் சொன்னார்.

“குடும்பத்தில் ஆண்களுக்கு அந்தப் பணம் கொடுக்கப்பட்டால் பெண்களுக்கு அது  கிடைப்பதில்லை என்ற புகார்களும் வந்துள்ளன.”

“ஆகவே அந்த உதவித் தொகை 600 ரிங்கிட் என்றால் அதனை தலா 300
ரிங்கிட்டாக இரண்டு கடித உறைகளில் வைக்கலாம்,” என்றார் அவர்.