திரங்கானு கோலா பெசுட் இடைத் தேர்தல் முடிவுகள் பிஎன் வழி நடத்தும் திரங்கானு மாநில அரசாங்கத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.
இவ்வாறு அம்னோ தகவல் பிரிவுத் தலைவர் அகமட் மஸ்லான் சொல்கிறார்.
அந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றாலும் மாநிலச் சட்டமன்றத்தில் 16க்கு 16 என்ற நிலை ஏற்பட்டால் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் முகமட் ஜுபிர் எம்போங்-கின் ஒரு வாக்கை சேர்த்தால் அது 17க்கு 16 ஆகி பிஎன் அதிகாரத்தில் தொடர வகை செய்யும் என மஸ்லான் கருதுகிறார்.
திரங்கானுவில் 13வது பொதுத் தேர்தலில் பிஎன் 17 இடங்களையும் எதிர்க்கட்சிகள் 15 இடங்களையும் வென்றன. அதனால் மந்திரி புசார் அகமட் சைட் மாநில அரசாங்கத்தை அமைத்தார்.
அண்மையில் கோலா பெசுட் உறுப்பினர் ஏ ரஹ்மான் மொக்தார் காலமானதைத் தொடர்ந்து அந்த இடம் காலியாகியுள்ளது.