இந்த நாட்டில் குற்றச் செயல் நிலவரம் மோசமடைந்து வருகிறது என சில தரப்புக்கள் சொல்வது கற்பனை அல்ல என்பதை இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுதின் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
நேற்று முன் தினம் அவருடைய புக்கிட் டமன்சாரா வீட்டில் திருடர்கள்
கொள்ளையடித்த பின்னர் அவர் அவ்வாறு ஒப்புக் கொண்டுள்ளார்.
“நம் நாட்டில் குற்றச் செயல்கள் கடுமையான பிரச்னையாகி விட்டதை அந்தச் சம்பவம் நினைவுபடுத்துகிறது,” என்றார் அவர்.
“அந்தப் பிரச்னை உண்மையானது, கற்பனை அல்ல.”
“உங்களுடைய பாதுகாப்பு, உங்கள் குடும்பத்தாருடைய பாதுகாப்பு குறித்தும் எப்போதும் விழிப்புடன் இருங்கள்,” என கைரி தமது முகநூல் பக்கத்தில் நேற்றிரவு எழுதியுள்ளார்.
இந்த நாட்டில் குற்றச் செயல்கள் கடுமையான பிரச்னை என்பதைப் போலீசாரும் முன்னைய உள்துறை அமைச்சரும் திரும்பத் திரும்ப மறுத்ததுடன் அது மக்களுடைய கற்பனையே என்றும் கூறியுள்ளனர்.
ஒரு BN அரசியல்வாதி உண்மையை ஒப்புகொண்டதிற்கு நன்றி. பட்டாள்தான் தெரியும் என்பார்கள். இப்பொழுது நீங்கள் அமைச்சரவை கூட்டத்தில் இதை கடுமையாக எடுத்து கூறலாம்.
உப்பைத் தின்னவனுக்கே தண்ணீரின் அருமை தெரியும்!
அமைச்சர் கைரி ஜமாலுதின் சில நேரங்களில் அறிவாக பேசுகிறார்!!
உனக்கு வலித்தால்தான் வலி என்னவென்று தெரியுமோ? நீயெல்லாம் ஒரு மக்கள் பிரதிநிதி?