மலாக்கா அரசு பண்டார் ஹிலிர் பகுதியில் ஏற்படும் நெரிசலைப் போக்க ஜோங்கர் வாக்-கைச் சுற்றிலும் உள்ள சாலைகளைப் போக்குவரத்துக்குத் திறந்து விடுவது என்ற முடிவிலிருந்து மாறாது என அதன் முதலமைச்சர் இட்ரிஸ் ஹரோன் கூறுகிறார்.
அதன் தொடர்பில் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஜோங்கர் சாலை இரவுச் சந்தை நெரிசலுக்குக் காரணமல்ல என நிரூபிக்கும் வரையில் அந்தச் சாலைகளில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றார் அவர்.
அந்தப் பகுதியில் நிலவும் நெரிசல் பற்றி சுற்றுப்பயணிகளிடமிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்களை மாநில அரசு பெற்றுள்ளது என அவர் சொன்னதாக உத்துசான் மலேசியா செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால் அந்தச் சாலைகளைப் போக்குவரத்துக்குத் திறந்து விடுவது ஜோங்கர் வாக் வார இறுதி இரவுச் சந்தை மூடப்படுவதற்கு வழி வகுத்து விடும் எனக் கருதப்படுகின்றது.