2008ஆம் ஆண்டுத் தேர்தலுக்கான செலவு ரிம200 மில்லியன். அந்த ரிம200 மில்லியன் 13வது பொதுத் தேர்தலுக்கு ரிம400 மில்லியனாகப் பல்கிப் பெருகியதை அரசாங்கம் விளக்க வேண்டும்.
“ஐந்தாண்டுகளில் வாக்காளர் எண்ணிக்கை 20 விழுக்காடு உயர்ந்தது ஆனால், தேர்தல் செலவு 100 விழுக்காடு உயர்ந்தது எப்படி?”, என்று சிரம்பான் எம்பி அந்தோனி லோக் இன்று நாடாளுமன்றத்தில் விடுத்த அறிக்கை ஒன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
222 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான இந்தச் செலவுத் தொகையைப் பார்க்கும்போது ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரி ரிம.1.8 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இது அதிகமாகும் என்றாரவர்.
இது எப்டி இருக்கு? நல்ல கேட்டிங்க அன்ன…